காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்பாட்டத்தில் இணைந்த பொலிஸ் அதிகாரி கைது!!
advertise here on top
advertise here on top

காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்பாட்டத்தில் இணைந்த பொலிஸ் அதிகாரி கைது!!


அரசுக்கு எதிராக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் இன்று 6ஆவது நாளாகவும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக இரத்தினபுரி சிறிபாகம, குட்டிகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இணைந்துகொண்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், 

நாளை நான் இந்த பதவியில் இருக்கமாட்டேன், இன்று நான் இங்கு வந்துள்ளேன். என்னைப் போல முதுகெழும்பு உள்ள நாட்டின் நெருக்கடி நிலைமையை புரிந்துகொண்ட பொலிஸ் அதிகாரிகள் இங்கு வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், குறித்த அதிகாரியை தற்போது பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.