பாடசாலைகளுக்கு இன்றுடன் தவணை விடுமுறை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலைகளுக்கு இன்றுடன் தவணை விடுமுறை!

சகல அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை இன்றுடன் நிறைவுறுத்தப்பட்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளின் 2021 கல்வி ஆண்டின் மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகள் நாளை மறுதினம் (08) நிறைவடையவிருந்த நிலையில், இவ்வாறு முற்கூட்டிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பாடசாலைகளின் (2022 கல்வியாண்டுக்கான) முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் முன்னர் திட்டமிட்டப்படி எதிர்வரும் 18 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.