எதிர்வரும் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வரும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை மேலும் நடைமுறைப்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேசிய வருமானம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அதனை அதிகரிப்பதற்காக குறைக்கப்பட்ட வரிகளை மீண்டும் அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)