அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தும் இலங்கை மக்களின் உரிமைக்கு எந்த இடையூறும் ஏற்படாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
றம்புக்கணை சம்பவம் தொடர்பில் இலங்கை பொலிஸ் பக்கச்சார்பற்ற வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்ளும் என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
றம்புக்கணையில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் தாம் மிகவும் வருத்தமடைவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
போராட்டத்தின் போது குழப்பம் ஏற்படுத்து வகையில் நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.