தற்போதைய எரிவாயு நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், உள்ளூர் நுகர்வோருக்கு குறைந்த விலையில் எரிவாயுவை வழங்குவதற்கும் புதிய வழங்குநர் ஒருவரை தேர்ந்தெடுக்க கண்டறிய லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய நிறுவனம் குறித்து கருத்து தெரிவித்த லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர் விஜித அஹேரத், புதிய வழங்குநராக தாய்லாந்தை சேர்ந்த “சியாம் கேஸ்” தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தற்போதைய எரிவாயு வழங்குநரை காட்டிலும் சியாம் நிறுவனம் மூலம் 9 மில்லியன் டொலர் குறைவான எரிவாயுவை கொள்வனவு செய்யும் திறன் உள்ளதாக லிட்ரொ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போதைய ஓமான் விநியோக நிறுவனத்தின் ஒப்பந்த காலம் இம்மாதம் நிறைவடைவதால், அந்நிறுவனத்தினால் இலங்கைக்கு அனுப்பப்படும் கடைசி எரிவாயு கப்பல் நேற்று (29) இலங்கை வந்தடைந்தது.
இதன்படி, அடுத்த மாதம் முதல் அடுத்த 02 வருடங்களுக்கான டெண்டர் அழைப்பின் மூலம் இந்த புதிய எரிவாயு வழங்குநர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)