கிளீன் போல்டான இம்ரான் கான்.. பறிபோன ஆட்சி... நள்ளிரவில் மாறிய காட்சி! நடந்தது என்ன?
advertise here on top
advertise here on top

கிளீன் போல்டான இம்ரான் கான்.. பறிபோன ஆட்சி... நள்ளிரவில் மாறிய காட்சி! நடந்தது என்ன?

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று (சனிக்கிழமை) பெரிய களேபரமே நடைபெற்றது. உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி சனிக்கிழமை முடிவதற்குள் அங்கு நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இரவு வரை நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் சரியாக 12 மணிக்கு சில நிமிடங்களுக்கு முன்பாக நம்பிக்கையில்லா தீர்மானம் அங்கு தாக்கல் செய்யப்பட்டது.

நம்பிக்கை இல்லா தீர்மானம்

அதற்கு முன்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சபாநாயகர் அசாத் குவைசர், துணை சபாநாயகர் குவாஸிம் கான் இருவரும் ராஜினாமா செய்தனர். இதையடுத்து சட்டப்படி எதிர்க்கட்சி கூட்டணியின் தலைவர் ஆயாஸ் சாதிக் அங்கு சபாநாயகராக பதவி ஏற்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நடத்தி வைத்தார். பாகிஸ்தான் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை.

வாக்கெடுப்பு

இதனால் இம்ரான் கான் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தோல்வி அடைந்தார். பாகிஸ்தானில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் நீக்கப்பட்ட முதல்வர் பிரதமராகி உள்ளார் இம்ரான் கான். இந்த நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷேபாஸ் ஷெரிப் நியமனம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அங்கு பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பு நடந்து முடிந்த நிலையில் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கி உள்ளன.

யார் இவர்?

பாகிஸ்தானின் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர் ஷேபாஸ் ஷெரிப் பிரதமருக்கான ரேஸில் இருக்கிறார். 69 வயதாகும் இவர் நவாஸ் ஷெரீப்பின் தம்பியாவார். நவாஸ் ஷெரிப் ஏற்கனவே பாகிஸ்தான் பிரதமராக மூன்று முறை இருந்தவர். 2018ல் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நவாஸ் ஷெரீப் மருத்துவ சிகிச்சைக்காக லண்டனில் வசித்து வருகிறார். இவரின் முஸ்லீம் லீக் கட்சியை தற்போது அவரின் தம்பி ஷேபாஸ் ஷெரிப்தான் நடத்தி வருகிறார்.

கட்சி தலைவர்

முஷரப் ஆட்சியில் வீட்டு சிறையில் சவுதியிலும் இவர் இருந்தார். ஷேபாஸ் ஷெரிப் 2007ல் மீண்டும் பாகிஸ்தான் திரும்பினார். நவாஸ் ஷெரிப் பனாமா வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பின்னர் வாஸ் ஷெரிப்பின் முஸ்லீம் க்ளீன் நவாஸ் கட்சிக்கு கடந்த 2018 மார்ச் மாதம் ஷேபாஸ் தலைவராக அறிவிக்கப்பட்டார். இவர் தற்போது ராணுவத்தின் ஆதரவோடு அங்கு ஆட்சிக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது

இன்று அதிகாலை

அங்கு பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஷேபாஸ் ஷெரிப்பின் முஸ்லீம் கட்சியோடு இணைந்துள்ளது. அதோடு ஆளும் கூட்டணியான முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட் இம்ரான் கூட்டணியில் இருந்து பிரிந்து இவருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளன. இதனால் இன்று அதிகாலை 2 மணிக்கு அங்கு புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அதிகாலையில் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.