A/L, O/L மற்றும் புலைமை பரிசில் பரீட்சை திகதிகள் வெளியாகின!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

A/L, O/L மற்றும் புலைமை பரிசில் பரீட்சை திகதிகள் வெளியாகின!

இந்த ஆண்டு நடைபெற உள்ள அரச பாடசாலை பரீட்சைகளுக்கான திகதிகளை அரசு அறிவித்துள்ளது.

க.பொ.த உயர்தரம், க.பொ.த சாதாரண தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதிகளை கல்வி அமைச்சர் அறிவித்தார்.

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி முதல் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.