
சந்தையில் தற்போது 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டை ரூ. 2300 - 2350 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதோடு, புதிய சீமெந்தின் விலையை ரூ.500 - 600 வரை உயர்த்த சீமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
சீமெந்து விலை உயர்ந்துள்ளதாலும், புதிய கட்டடங்கள் கட்டும் பணி நிறுத்தப்பட்டதால் தேவை குறைந்துள்ளதாகவும், இதனால் மொத்த வியாபார நிலையங்களில் சீமெந்து இருப்பு இல்லை எனவும் சீமெந்து வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)