
தற்போதைய எதிர்க்கட்சி பிரதம உறுப்பினராக இருக்கும் கிரியெல்ல, 2017ஆம் ஆண்டு இந்த விடயம் தொடர்பில் அவ்வாறான கலந்துரையாடல்கள் இடம்பெறாத நிலையில், தாம் வாய்மொழியாக தனது சொத்துக்களை பாராளுமன்றத்தில் அறிவித்ததாக மீண்டும் வலியுறுத்தினார்.
அனைத்து அரசியல்வாதிகளும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை பாராளுமன்ற உறுப்பினர் மேலும் வலியுறுத்தியதோடு, ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் இந்த திட்டத்தை பின்பற்றி தமது சொத்துக்களை பகிரங்கமாக அறிவிக்க முடியும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)