இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தயாரித்துள்ள ஆரம்ப அறிக்கை தொடர்பில் சவால் விடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் அடிப்படை விளக்கத்தை அனுப்பியுள்ளதாகவும், தனது கருத்துக்களை நிதியமைச்சகத்திடமும் இறுதி அறிக்கையை பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் என்ற வகையில் இறுதி ஆவணத்தை மாத்திரம் பாராளுமன்றத்தில் முன்வைப்பதாகவும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)