கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றிலிருந்து சுமார் 350 கிலோகிராம் கோகைன் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீள் ஏற்றுமதிக்கான இரும்பு பொருட்கள் எனக் குறிப்பிட்டு போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்ட கொள்கலன் ஒன்றிலிருந்து குறித்த கோகைன் மீட்கப்பட்டுள்ளது.
இந்த கோகைனின் இலங்கை சந்தைப் பெறுமதி 600 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
பனாமாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கொள்கலன் ஒன்றிலிருந்தே குறித்த கோகைன் மீட்கப்பட்டதாகவும், குறித்த போதைப்பொருள் இந்தியாவுக்கு கொண்டுசெல்ல திட்டமிடப்பட்டிருந்ததாகவும் சுங்க தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இந்த கோகைன் போதைப்பொருள் தொடர்பில் இலங்கை சுங்கத்தின் விசேட விசாரணைக்குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகிறது.