பஹ்ரைனில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் உணவகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து அந்த உணவகம் அதிகாரிகளால் மூடப்பட்டது.
பஹ்ரைன் தலைநகர் மனாமாவின் அட்லியா பகுதியில் அமைந்துள்ள பஹ்ரைன் லான்டர்ன்ஸ் – இந்திய உணவகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உணவகம் தங்களது சமூக ஊடகப் பக்கத்தில் முறைப்படி மன்னிப்புக் கேட்டது.
35 ஆண்டுகளாக சேவையில் உள்ள உணவகம், மேலாளர் செய்த தவறுக்கு வருந்துவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மன்னிப்பு கோரியுள்ளது.
இந்தியரான மேலாளர் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அதிகாரப்பூர்வ கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஜாப் அணிந்த பெண் ஒருவரை உணவக ஊழியர்கள் தடுக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.