காகிதப் பற்றாக்குறை; மின் பட்டியல்களை எழுத்துமூலம் வழங்க நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காகிதப் பற்றாக்குறை; மின் பட்டியல்களை எழுத்துமூலம் வழங்க நடவடிக்கை!


காகித தட்டுப்பாட்டினால் மின் பட்டியல்கள் அச்சிடும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது.


மின் பாவனையாளர்களுக்கு மின் பட்டியல்களை எழுத்து மூலம் வழங்குமாறு மின் வாசிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர், ஊடகப்பேச்சாளர் அன்ரூ நவமணி தெரிவித்தார்.


மின் பட்டியல்கள் தொடர்பில் ஏதேனும் சிக்கல் நிலவினால், இலங்கை மின்சார சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, தேடி அறிந்துகொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.


இதனிடையே, இந்த விடயம் தொடர்பில் மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேராவிடம் வினவியபோது, விரும்பிய பாவனையாளர்களுக்கு இலத்திரனியல் மின் பட்டியல்களை பெற்றுக்கொடுக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.