இலங்கைக்கு 37,300 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றி வந்த கப்பலுக்கு 31 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டு எரிபொருள் தரையிறக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த கப்பலில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள டீசலில் 8,000 மெட்ரிக் டன் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)