
இதற்கு அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் முன்னிலை வகித்து வருவதாகவும், இதற்கு பிரபல பிக்கு ஒருவரும் உதவி செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.
பதவிகள் கிடைக்காமை, அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடாமை போன்ற அரசாங்கத்தின் பங்களிப்பால் விரக்தியடைந்துள்ள அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இந்தக் குழு கலந்துரையாடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கம் பெரும்பான்மை பலத்தை இழக்கும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் அண்மையில் கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அன்றைய தினம் பிரசன்னமாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)