மின்சாரம் கடத்தும் பாதையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தென் மாகாணத்தில் ஏனைய பகுதிகளை விட அதிக நேரம் மின்வெட்டுகளை அமுல்படுத்த அதிகாரிகள் நிர்ப்பந்தித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
இப்பிரச்சினை காரணமாக இலங்கை மின்சார சபைக்கு கொழும்பில் மின்சாரத்தை உற்பத்தி செய்து அதனை தென்மாகாணத்திற்கு அனுப்ப முடியவில்லை என PUCSL தலைவர் ஜனக ரத்நாயக்க பேட்டியொன்றின் போது தெரிவித்தார்.
இதனால் தென் மாகாணத்தில் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது அதிகளவிலான மின்வெட்டுகளை அமுல்படுத்துவதற்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.
இது தென் மாகாண மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி எனத் தெரிவித்த ரத்நாயக்க, இந்த நிலைமையை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இப்பிரச்சினையை நிவர்த்தி செய்யும் நோக்கில், தனியார் மின் நிலையங்களில் இருந்து மின்சார அலகுகள் கொள்வனவு செய்யப்பட்டு தென் மாகாணத்திற்கு வழங்கப்படுவதாக PUCSL தலைவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)