மனித உரிமைகள் பேரவையின் 2021ஆம் ஆண்டு மாநாட்டின் போது இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அடிப்படையிலான ஆதாரங்களைத் திரட்டும் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு உறுப்பு நாடுகள் ஒத்துழைக்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
49ஆவது மனித உரிமைகள் பேரவையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தக்குதல் நடத்தப்பட்டு ஏறக்குறைய 3 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால் இன்னும் இதற்கு நீதி வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக நீதிகோருகின்றவர்கள் துன்புறுத்தப்படும் நிலைமையே காணப்படுகிறது.
சில இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செயற்பாடாக காட்டப்பட்ட போதிலும் அது பாரிய அரசியல் சூழ்ச்சியின் ஒரு பகுதி என விசாரணைகளில் தெரியவந்தது.
எனவே ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஊடாக உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.