இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் ஒரு நாள் இருதரப்பு விஜயமாக நேற்று (13) இலங்கை வந்தடைந்தார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இளவரசர் பைசலை இலங்கையின் நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் இலங்கைக்கான சவுதி தூதுவர் அப்துல் நாசர் அல்-ஹார்த்தி ஆகியோர் வரவேற்றனர்.
இந்த நிகழ்வில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு மற்றும் கொழும்பில் உள்ள இராச்சிய தூதரகத்தின் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கவுள்ளார்.
சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் இன்று தனது விஜயத்தை முடித்துக் கொண்டதையடுத்து, நேபாளம் செல்லவுள்ளார். (யாழ் நியூஸ்)