இன்றும் (05) நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீசல் தட்டுப்பாடு இன்னும் நீடிக்கிறது, அதே வேளையில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் குறைந்த அளவிலான எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவதால் பல பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
எரிபொருள் தட்டுப்பாட்டைக் கண்டித்து கிரிபத்கொட, களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. (யாழ் நியூஸ்)