பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாகனங்களை டொலர்களில் நாட்டுக்கு அனுப்புவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் தாம் முன்வைத்த முன்மொழிவை பரிசீலிக்க முடியுமா என தொலவத்த கேள்வி எழுப்பியுள்ளார். இது அதிகரித்து வரும் வாகனங்களின் விலையை குறைக்கவும், டாலரில் வரி செலுத்துவதால் அரசுக்கு டாலரை வழங்கவும் உதவும்,'' என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், டொலர் நெருக்கடி தீர்ந்த பின்னரே வாகனங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்றார். (யாழ் நியூஸ்)