உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது எட்டாவது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக முக்கிய கட்டடங்கள் மற்றும் டவர் உள்ளிட்ட இடங்களை குறித்துவைத்து தாக்குதல் நடத்துகிறது.
இதில் உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது.
இந்நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சற்றுமுன்னர் துவங்கியுள்ளது.
கடந்த 28ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தற்போது இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)