சதொச உயர்மட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் வாடிக்கையாளர் கொள்வனவு செய்யும் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு பொருத்தமான பையை எடுத்து வருமாறு ஹட்டன் சதொச கிளை எந்தவொரு வாடிக்கையாளருக்கும் அறிவித்தலின் பேரில் எந்தவொரு பையையும் வழங்காது எனவும் சதொச கிளைக்கு முன்பாக விளம்பரம் ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று (28) இரவு 7.00 மணியளவில் மின்வெட்டு ஏற்பட்ட போது, ஹட்டன் சதொச கிளைக்கு வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் உணவுப் பொருளை வாங்க காசாளரிடம் வந்த போது பொருட்களை எடுத்துச் செல்ல பை ஒன்றை காசாளர் அவரிடம் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் சதொச கிளைக்குள் அட்டகாசமாக நடந்து கொண்டதுடன், சதொச கிளையின் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கும் நோக்கில் சதொச கிளையின் முகாமையாளர் மற்றும் ஊழியர்களை தாக்க முயற்சித்ததாக சந்தேக நபரை கைது செய்த ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். (யாழ் நியூஸ்)