மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியான கணவன் மனைவி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியான கணவன் மனைவி!


யாழ். புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இருவரும் பலியாகியுள்ளனர்.


இன்று (10) மதியம் வாழைக்குலை ஒன்றினைக் கணவன் வெட்டியபோது தண்ணீர் இறைக்கும் மோட்டார் அருகிலே இருந்த மின்சார வயர் அறுந்துள்ளது.


அதனை சரிசெய்த பின்னர் மனைவி அதற்கு அருகில் உள்ள கிணற்று தொட்டியிலே நீராடிக் கொண்டிருந்தபோது மின்சார விபத்து ஏற்பட்டு மனைவி மீது மின்சாரம் பாய்ந்தது மனைவியைக் காப்பாற்றுவதற்காக கணவன் ஓடிச் சென்ற நிலையில் இவருக்கும் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர்.


குறித்த தம்பதியினருக்கு மகளொருவர் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்.


இருப்பினும் இவர்கள் உயிரிழந்தது அயலவர்களுக்குத் தெரியாத நிலையில் பல்கழைக்கழகம் சென்று வீடு திரும்பிய மகள் பெற்றோரைத் தேடியபோது இருவரும் கிணற்றுக்கு பக்கத்தில் இருவரும் உயிரிழந்த நிலையில் குற்றுயிராக கிடந்தனர்.


கணவனுக்கு 59 வயது எனவும் மனைவிக்கு 55 வயது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


-பிரதீபன்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.