சஹ்ரானுடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்ட 8 பேர் விடுதலை!
advertise here on top
advertise here on top

சஹ்ரானுடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்ட 8 பேர் விடுதலை!


உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலைத் தொடர்ந்து சஹ்ரான் குழு­வி­ன­ருடன் தொடர்­பு­பட்­ட­தாக கூறி கைது செய்­யப்­பட்ட ஹொர­வப்­பொத்­தானை பிர­தே­சத்தைச் சேர்ந்த 8 பேர் சகல குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்தும் விடுவிக்கப்பட்­டுள்­ளனர்.


இது தொடர்­பான வழக்கு நேற்று முன்­தினம் (15) கெப்­பித்­தி­கொல்­லாவ நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­ட­போதே, இவர்­களை சகல குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்தும் விடு­விப்­ப­தாக நீதிவான் அறி­வித்தார்.


இவர்கள் மீது சுமத்­தப்­பட்ட எந்­த­வித குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கும் ஆதா­ரங்கள் இல்லை என்­பதால் இவ்­வ­ழக்கை முன்­னெ­டுத்துச் செல்ல விரும்­ப­வில்லை என சட்­டமா அதிபர் திணைக்­களம் ஏலவே நீதி­மன்­றுக்கு அறி­வித்­தி­ருந்­தது. இந் நிலை­யி­லேயே இவர்கள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர்.


அடிப்­ப­டை­வாத மதக் கொள்­கை­களைப் பரப்­பி­யமை உட்­பட பல்­வேறு குற்­றச்­சாட்­டு­களை முன்வைத்து 2019 மே மாதம் 24 ஆம் திகதி ஹொர­வப்­பொத்­தான பொலிஸார் ஐவரைக் கைது செய்­தனர். அதே காலப்­ப­கு­தியில் மேலும் ஐவர் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.


இவர்­களில் 9 பேர் கைது செய்­யப்­பட்ட 6 மாதங்­களின் பின்­னரும் ஒருவர் இரண்­டரை வரு­டங்­களின் பின்­னரும் பிணையில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தனர். இந் நிலை­யி­லேயே இவர்­களில் 8 பேர் சகல குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்தும் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். மேலும் இருவரது வழக்குகள் நிலுவையில் உள்ளன.


இவர்கள் கைது செய்­யப்­பட்ட சமயம், இவர்­களில் 5 பேரின் வங்கிக் கணக்­கு­களில் சுமார் 100 கோடி ரூபா பணம் இருந்­த­தாக சிங்­களப் பத்­தி­ரிகை ஒன்று போலி­யான செய்­தியை வெளி­யிட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.


-விடிவெள்ளி


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.