இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளையும் (30) நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L மற்றும் P,Q,R,S,T,U,V,W வரையான வலயங்களில் காலை 8.00 மணிமுதல் நள்ளிரவு 12.00 மணிவரையான காலப்பகுதியில் கட்டங்கட்டமான சுமார் 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதேவேளை, M,N,O,X,Y,Z போன்ற வலயங்களுக்கு காலை 8.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை தொடர்ச்சியாக 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.