
சந்தேகநபர்கள் மூவரும் தங்காலை - வீரகெட்டிய பகுதியைச் சேர்ந்தவர்களென பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
மதுபோதையில் இருந்த, 15 பேர் கொண்ட குழுவினர், பொலிஸ் கான்ஸ்டபிளின் வீட்டிற்கு சென்று அவரையும், அவரது சகோதரரையும் வீட்டில் வைத்து தாக்கியுள்ளனர்.
பின்னர், சந்தேகநபர்கள் பொலிஸ் உத்தியோகத்தரை அருகிலுள்ள உணவகவொன்றுக்கு அழைத்து சென்று தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்துள்ளாரென விசாரணைகளில் வெளிவந்துள்ளன.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த அவரது சகோதரர் கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தறபோது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனையோரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.