நாட்டினுள் நுழையும் இலங்கையர்களுக்கு வெளியான புதிய அறிவிப்பு!
advertise here on top
advertise here on top

நாட்டினுள் நுழையும் இலங்கையர்களுக்கு வெளியான புதிய அறிவிப்பு!


இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கும் இலங்கை பிரஜைகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களுக்கான புதிய தேவைகளை இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL) அறிவித்துள்ளது.

அதன்படி, நாட்டினுள் நுழையும் போது ETA, PCR மற்றும் Rapid Antigen பரிசோதனைகள் மற்றும் கோவிட் காப்புறுதி திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய முறை ஒன்று வெளியிட்டுள்ளது.

இலங்கையர்களுக்கு நாட்டினுள் நுழையும் போது 72 மணித்தியாளத்துக்குள் பெறப்பட்ட PCR அல்லது 48 மணித்தியாளத்துக்குள் பெறப்பட்ட Rapid Antigen பரிசோதனை அறிக்கை சமர்ப்பித்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டிய சுகாதார அறிவிப்பு படிவம் கட்டாயம் இல்லை, நாட்டில் விமான நிலையத்தை அடைந்த பின்னர் நிரப்பிக் கொள்ளலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.