பணத்தை அச்சடிப்பதன் மூலம் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என்றால், ஒவ்வொரு வீட்டிற்கும் பணம் அச்சிட அச்சகம் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்பி முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் பணத்தை அச்சடிப்பதன் மூலம் ஒரு நாட்டை வளர்க்க முடியும் என்றால், ஒவ்வொரு வீட்டுக்கும் பணம் அச்சிடும் இயந்திரம் கொடுத்தால் முடிந்துவிடும். பணத்தை அச்சிடுவதைத் தவிர, நாட்டின் உற்பத்தியை மேம்படுத்த, முதலீட்டை அதிகரிக்க, பொருட்கள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான எந்த திட்டமும் அரசிடம் இல்லை.
பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக பதவியேற்ற நாள் முதல் 678 பில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது. இதனால் பணவீக்கம் 14% ஆக உயர்ந்துள்ளது என்றார். (யாழ் நியூஸ்)

