இலஞ்சம் ஒழிப்பு சட்டத்தை மீறி தனியார் விமானத்தை பரிசாக பெற்றுக்கொண்டு பிரதமர் லஞ்சம் பெற்றாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
2021 டிசம்பர் 31ஆம் திகதி ஊடகவியலாளர் தரிந்து உடுவகெதரவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
CIABOC செயலாளர் அப்சரா கல்தேரவின் கையொப்பமிடப்பட்ட 2022 பெப்ரவரி 2 ஆம் திகதிய கடிதத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஊடகவியலாளர்களுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்தது.
ஜெட் பயணம் குறித்த செய்திகள் ஊடகங்களில் பரவியதையடுத்து, பிரதமரின் நெருங்கிய சகா ஒருவரால் இது பரிசளிக்கப்பட்டதாக பிரதமரின் தலைமை அதிகாரி யோஷித ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)

