பெலாரஸ் நாட்டில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தை சற்று முன்னர் முடிவுக்கு வந்தது.
தூதுக்குழுக்கள் தற்போது தங்கள் நாடுகளின் தலைநகரங்களுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு நாடுகளுக்குமிடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை விரைவில் நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், கலந்துரையாடலின் உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை.
எனினும் இந்த கலந்துரையாடலின் போது இரு தரப்பினருக்குமிடையில் சில விடயங்களில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக போர்நிறுத்தம் குறித்து விவாதித்த அதிகாரிகள் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)