லங்கா ஐஓசி (LIOC) தமது அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
இன்று (25) நள்ளிரவு முதல் குறித்த விலை அதிகரிப்பு அமுலாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 20 ரூபாவினாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட உள்ளது.
அதன்படி, பெற்றோல் லீற்றர் ஒன்றில் புதிய விலை 204 ரூபாவாகவும் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 139 ரூபாவாகவும் நிர்ணயமாகியுள்ளது. (யாழ் நியூஸ்)