
ஹொரணை - பெல்லப்பிட்டிய பகுதியில் சந்தேகநபருக்கும், காவல்துறையினருக்கும் இடையே இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் பலியானதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கொலைகள் உட்பட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஹொரண நீலக்க, மாமியாரின் பொறுப்பில் இருந்த 7 வயதான தனது மகனை கடத்திச் சென்றுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேக நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது மனைவியின் கைகால்களை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதாகவும் அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேகநபரை கைது செய்ய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில், நேற்று (16) இரவு குறித்த நபர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி, தனது மகனை கடத்திச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்திருந்தது.