இதன்படி நாளை நண்பகல் 12.00 மணிக்கு முன்னதாக மின்வெட்டு அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதனால் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், போதியளவு எண்ணெய் கையிருப்பு மற்றும் நிதி இருக்கு காரணத்தினால் நாளை (21) ஏனைய பிரதேசங்களில் மின்வெட்டு தேவைப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)