பிட்காயின் நன்கொடைகள் மூலம் உக்ரேனிய போர் முயற்சிகளுக்கு இதுவரை குறைந்தது 9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக கிரிப்டோகரன்சி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் அரசாங்கம், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தன்னார்வக் குழுக்கள் ஒன்லைனில் தங்கள் பிட்காயின் வாலட் முகவரிகளை விளம்பரப்படுத்தியதன் மூலம் பணத்தை திரட்டியதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை 4,000க்கும் மேற்பட்ட நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன, ஒரு அறியப்படாத நன்கொடையாளர் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றுக்கு 3 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள Bitcoin ஐ வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரேனிய அரசாங்கம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு பயனர்களை "உக்ரைன் மக்களுடன் கைகோர்க்குமாறு" அழைப்பு விடுத்தது. அத்துடன், Bitcoin, Ethereum மற்றும் USDT கிரிப்டோகரன்சிகளின் வடிவத்தில் நன்கொடைகளை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவித்திருந்தது.
இந்நிலையில், இரண்டு கிரிப்டோகரன்சி walletsக்கான முகவரிகளையும் வெளியிட்டது. இதனையடுத்து நான்கு மணி நேரத்திற்குள் 3.3 மில்லியன் டொலருக்கு அதிகமான நன்கொடைகளை திரட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதேவேளை, கிரிப்டோகரன்சி நிதி திரட்டல் என்பது போரின் நவீன பகுதியாக மாறியுள்ளது, உலகெங்கிலும் உள்ள பிற சமீபத்திய மோதல் மண்டலங்களிலும் இது காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.