இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் அதற்கு காரணமான காரணிகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தினால் தயாரிக்கப்பட்ட விசாரணை அறிக்கை அதன் பணிப்பாளர் சபையில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் கடன் மதிப்பீட்டை மீளச் செலுத்துவதில் உள்ள சிரமம், இலங்கையின் சர்வதேச தரமதிப்பீடுகள் குறைக்கப்பட்டமை உள்ளிட்ட பல விடயங்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பரில் பொருளாதார நிலை குறித்து சிறப்பு விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து அந்த நிறுவனம் இந்த அறிக்கையை தொகுத்துள்ளது.
இதேவேளை, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் ஏப்ரல் மாதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) விஜயம் செய்து அதன் தலைவர்களை சந்திக்க உள்ளார். (யாழ் நியூஸ்)