குடிபோதையில் பாதுகாப்பு அதிகாரியை தாக்கிய பிக்குகள்!
advertise here on top
advertise here on top

குடிபோதையில் பாதுகாப்பு அதிகாரியை தாக்கிய பிக்குகள்!


கினிகத்தேன, பதுபொல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் பிரதமகுரு உட்பட ஐந்து இளம் பிக்குகள் தம்மைத் தாக்கி காயப்படுத்திய சம்பவத்தை கினிகத்தேன பொலிஸாரிடம் முறையிட்டபோது தனக்கு நியாயம் கிடைக்கப்படவில்லை என ஒரு குழந்தையில் தந்தையான கினிகத்தேன படுபொல பகுதியைச் சேர்ந்த துஷார சம்பத் லியனகே (வயது 36) தெரிவித்தார்.


விகாரையை அண்டியுள்ள தனியார் நிறுவனமொன்றில் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றி வரும் இவரிடம் கடந்த 15ஆம் திகதி அந்த நிறுவனத்திற்கு வந்த பிக்குகளிடம் ஏன் இவ்வாறு குடித்துவிட்டு இப்படி ஆபாசமான வார்த்தைகளை பிரயோகிக்கிறீர்கள் என்று வினவியதற்கு, கோபமடைந்த நிலையில் அனைத்து துறவிகளும் அவரது கையில் இருந்த டார்ச் லைட் இணை பிடுங்கி, தன்னை அடித்து காயப்படுத்தியதாக பாதிக்கப்பட்டவர் கூறினார்.


தாக்குதலில் காயமடைந்த துஷார சம்பத் லியனகே பல நாட்களாக கினிகத்தேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கினிகத்தேன பொலிஸில் முறைப்பாடு செய்த போதிலும் இதுவரை தமக்கு இந்த தாக்குதல் தொடர்பில் நீதி கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட துஷார சம்பத் லியனகே தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)


தகவல் - ரஞ்சித் ராஜபக்ஷ


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.