இனி சிவப்பு நிற ஹார்ட் இமோஜி அனுப்பினால் 5 ஆண்டுகள் சிறை!
advertise here on top
advertise here on top

இனி சிவப்பு நிற ஹார்ட் இமோஜி அனுப்பினால் 5 ஆண்டுகள் சிறை!


மத்திய கிழக்கு நாடான சவூதியில் வாட்ஸாப்பில் சிவப்பு நிற இதய குறியீட்டை குறிக்கும் எமோஜியை அனுப்பியதாக முறைப்பாடு எழுந்தால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என தகவல் வெளியாகியுள்ளது.


சவூதி அரசின் சைபர் கிரைம் சட்டத்தின்படி, இந்த குற்றத்துக்கு 1 இலட்சம் சவூதி ரியால் அபராத தொகையுடன் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாட்ஸாப்பில் இத்தகைய ஆட்சேபனைக்குறிய குறியீடுகள் அனுப்பப்படுவதாக அதிகாரிகளுக்கு முறைப்பாடு வழங்கப்பட்டு அது நிரூபிக்கப்பட்டால், அந்த முறைப்பாடு பாலியல் துன்புறுத்தலாக கருதப்பட்டு சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சவூதி இணையத்தளமொன்றில் வெளியான செய்தி: https://gulfnews.com/world/gulf/saudi/sending-red-heart-emojis-on-whatsapp-can-land-user-in-jail-in-saudi-arabia-1.85676931


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.