நீர்கொழும்பு, போருத்தோட்டை இலக்கம் 466 தக்கியா வீதி, தலுவகொட்டுவ, கொச்சிக்கடை என்ற முகவரியில் வசிக்கும் ஷரீப் அலி அவர்களின் மகளும், பர்ஹான் அவர்களின் மனைவியுமான பாத்திமா பஜீலா எனும் சகோதரி இரண்டு சிறுநீரகங்களும் (கிட்னி) பாதிக்கப்பட்ட நிலையில் உடனடியாக அதை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
31 வயதான இவர் மூன்று குழந்தைகளுக்கு (12, 10, 7 வயதுடையோரின்) தாயாவார். முச்சக்கர வண்டி ஓட்டுநராக வேலை செய்யும் இவரது கணவருக்கு வேறு எந்த வருமானங்களும் இல்லை.
இந்நிலையில் இவரது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சுமார் 30 இலட்சம் ரூபாய்கள் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தமது அன்றாட வாழ்க்கை செலவினை மேற்கொள்வதற்கே கடும் சிரமத்தினை எதிர் கொண்டுள்ள இவரது குடும்பத்தார் மேற்படி நிதியினை திரட்டுவதில் மிகவும் சிரமப்படுகின்றனர்.
ஆட்டோ ஓட்டுனராகிய தனது கணவரின் வருமானத்தில் இருந்து இந்தத் தொகைப் பணத்தை ஈடு செய்ய முடியாது என்பதனால் நல்லுள்ளம் கொண்ட உறவுகளின் உதவியையும், பங்களிப்பையும் எதிர்பார்க்கிறார்
எனவே, தயவு செய்து எமது சதகா, நன்கொடைகள் மூலமாக ஒரு ஏழைத் தாயின் நோயைக் குணமாக்கி, அவரது கண்ணீரையும் துடைத்து, இறைவனிடம் உயர்ந்த நன்மைகளை பெற்றுக்கொள்வோம்.
"ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்"
(அல்-குர்ஆன் 5: 32) என்ற திருமறை வசனத்தின் அடிப்படையில் இந்தச் சகோதரியின் பொருளாதார நிலைமையினை கருத்திற் கொண்டு அவரது சத்திர சிகிச்சை செலவுகளுக்காக உதவிகளை செய்ய முன்வருவோம்.
உங்களது ஒவ்வொரு ரூபாய் நன்கொடைக்கும் அல்லாஹ்விடத்தில் பலமடங்கு பெறுமதியான அருட்பாக்கியமும் ஈருல வெற்றியும் கொண்டதாக அமைய பிரார்த்திக்கிறோம். உங்கள் ஒவ்வொரு பகிர்வும், பங்களிப்பும் அவசரமாக அவரை இயல்பு வாழ்க்கைக்கு மீண்டு வர வழியமைக்கட்டும்!
வங்கிக் கணக்கு விபரம்,
Mrs. Sareef Ali Fajeela
A/C No. 8013357708
Commercial Bank
Negombo Branch
Sri Lanka
மேலதிக விபரங்களுக்கு,
சகோ. பர்ஹான்: 0779227171
சகோ. ஹாமித் அலி: 0741710404

