கண்டி, கெட்டம்பே பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் குளிரூட்டும் இயந்திரம் வெடித்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் குளிரூட்டியை சர்வீஸ் செய்து கொண்டிருந்த போது வெடிப்பு ஏற்பட்டதாக ஹோட்டலின் மேலாளர் ஒருவர் தெரிவித்தார்.
குளிரூட்டிக்குள் இருந்த வாயு வெடிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும், ஆனால் அதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
உயிரிழந்தவர் மாத்தளை, உக்குவெல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)