அமெரிக்க ஜனாதிபதி பைடன் ஃபாக்ஸ் நியூஸ் பத்திரிகையாளரை முட்டாள் மகன் (stupid son of a bitch) என திட்டியது நேரலை மைக்ரோஃபோனில் பதிவானது.
வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்து பத்திரிகையாளர்கள் அறையை விட்டு வெளியேறும்போது, ஃபாக்ஸ் நியூஸின் நிருபர், பணவீக்கம் குறித்து கேள்வி எழுப்பினார்.
தனது மைக்ரோஃபோன் இன்னும் இயக்கத்தில் இருப்பதை அறியாமல், ஜனாதிபதி பைடன் "stupid son of a bitch" என்று முணுமுணுத்தார், சிறிது நேரம் கீழே பார்த்தார். அந்த நேரத்தில் அறையில் இருந்த சத்தத்தில் பைடன் உண்மையில் என்ன சொன்னார் என்பதை கேட்க முடியவில்லை என்று செய்தியாளர் ஒப்புக்கொண்டார்.
ஆனால், "ஃபாக்ஸின் செய்தியாளர் பீட்டர் டூசி பணவீக்கம் குறித்து கேட்கப்படுவதைப் பற்றி ஜனாதிபதி உண்மையில் எப்படி உணருகிறார் என்று நீங்கள் ஆர்வமாக இருந்தால், வீடியோவை பாருங்கள் என்று அவர் மேலும் கூறினார்.
"ஆமாம், இதுவரை யாரும் அவர் கூறியதை சரிபார்த்து அது உண்மையல்ல என்று கூறவில்லை," என்று ஃபாக்ஸ் செய்தியாளர் அலட்சியமாக கூறினார். (யாழ் நியூஸ்)