வீடில்லாமல் தெரு ஓரத்தில் உறங்கிய பெண்மணி.. இப்போ மைக்ரோசாப்ட்ல வேலை செய்கிறாள்.. போராடி ஜெயித்த பெண்ணின் கதை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வீடில்லாமல் தெரு ஓரத்தில் உறங்கிய பெண்மணி.. இப்போ மைக்ரோசாப்ட்ல வேலை செய்கிறாள்.. போராடி ஜெயித்த பெண்ணின் கதை!


வீடில்லாமல் தெரு ஓரத்தில் உறங்கிய பெண்மணி ஒருவர் உலகின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர், மும்பையின் வசதியான அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அளவுக்கு வாழ்க்கை தரத்தை மேம்படுத்தியுள்ளார். வாழ்க்கை தனக்கு கொடுத்த அனைத்து சவால்களையும் தாண்டி, தன்னம்பிக்கை மிக்க பெண்ணாக ஷாகினா அத்தர்வாலா மாறியுள்ளார்.

ட்விட்டரில் பகிர்வு:

பலரின் கனவான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் முன்னணி டிசைனராக பணிபுரிந்து வருபவர் ஷாகினா அத்தர்வாலா. மும்பையின் சேரிப் பகுதியில் பிறந்து வளர்ந்த தனக்கு வாழ்க்கை கொடுத்த அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவரது தன்னம்பிக்கை வாழ்க்கை கதை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து ஷாகினா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நெட்பிளிக்ஸ் தொடரில் தனது பழைய இல்லத்தை பார்த்ததும், தனது வாழ்க்கைக் கதையை நினைவுகூர்ந்துள்ளதாக கூறியுள்ளார். “Bad Boy Billionaires: India" என்ற அந்த நெட்பிளிக்ஸ் தொடரில், நான் வாழ்ந்த சேரிப் பகுதி பருந்து பார்வையில் படமாக்கி இருந்தார்கள். அந்தக் காட்சிகளில் காட்டப்பட்டிருக்கும் பல வீடுகளில் எனது வீடும் ஒன்றாகும். அங்கிருந்து, 2015-ஆம் தனியாக எனது வாழ்க்கையை மேம்படுத்த கிளம்பினேன் என்று கூறியுள்ளார்.

கடினமாக இருந்த சேரி வாழ்க்கை:

வறுமை, பாலியல் துன்புறுத்தல் என சேரி வாழ்க்கை மிகவும் கடினமானதாக இருந்தது. ஆயினும், இந்த நெருக்கடிகள் தான், என் வாழ்க்கையை மாற்றியமைக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டின எனவும் கூறியுள்ளார். 15 வயதில், என்னைச் சுற்றியிருந்த பல பெண்கள் ஆதரவற்றவர்களாக, யாரையேனும் சார்ந்திருப்பவர்களாக, பாலியல் துன்புறுத்தல்களை அனுபவித்து துன்பப்பட்டுக் கொண்டிருந்தனர்.

விதியை மாற்ற விரும்பினேன்:

நானும் இது போன்ற வாழ்க்கை முறையில் சிக்கிவிடக் கூடாது என்று என்னினேன்.. எனக்காக காத்திருக்கும் விதியை மாற்ற விரும்பினேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, முதன் முறையாக ஷாகினா தனது பள்ளியில் கம்ப்யூட்டரை பார்த்துள்ளார். அவரது சிந்தனை முழுவதும் அதை நோக்கி நகர்ந்தது. கம்ப்யூட்டர் தனது வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் என நினைத்துள்ளார்.

பட்டினி இருந்தேன்:

ஆயினும், அவர் பெற்ற மதிப்பெண்கள் காரணமாக கம்ப்யூட்டர் வகுப்புகளுக்கு செல்வதற்குப் பதிலாக வேறு வேலைகளைச் செய்ய அவர் பயன்படுத்தப்பட்டுள்ளார். பல நிராகரிப்புகளை அவர் கண்ட பின்பும், தொழில்நுட்பம் ரீதியாக செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து, தனது தந்தையிடம் கடன் வாங்கியாவது தன்னை கணினி வகுப்பில் சேர்த்து விடும்படி கோரியுள்ளார். தொடர்ந்து, சொந்தமாக ஒரு கணினி வாங்கி விட வேண்டும் என மதிய உணவு சாப்பிடாமல், அந்தப் பணத்தைக் கூட சேமித்து வைத்து பலகட்ட போராட்டங்களுக்குப் பின்னர் கம்ப்யூட்டரை வாங்கியுள்ளார்.

அப்பார்ட்மெண்டில் வாழ்க்கை:

அதற்கு பிறகு, அதில் ப்ரோகிராமிங் துறையை தேர்வு பண்ணாமல், டிசைனிங் துறையைத் தேர்ந்தெடுத் துள்ளார். பின்னர் பல வருடங்களாக தான் எடுத்த முடிவில் உறுதியுடனும், நம்பிக்கையுடனும் கடின உழைப்பை செலுத்திய ஷாகினாவுக்கு, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணி கிடைத்துள்ளது. கடந்த வருடம் மும்பையின் முக்கிய பகுதியில் உள்ள வசதியான அடுக்குமாடி குடியிருப்புக்கு அவர் குடிபெயர்ந்துள்ளார். இது வாழ்க்கையில் தான் எடுத்து வைத்த மிகப்பெரிய உயரம் என்றும், தனது கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றி என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இளம்பெண்களுக்கு தன்னம்பிக்கை வார்த்தைகள்:

அதுமட்டுமல்லாமல், வாழ்க்கையில் ஒரே இடத்தில் தேங்கி இருக்கும் இளம்பெண்களுக்கு, ஷாகினா சில தன்னம்பிக்கை வார்த்தைகளையும் கூறியுள்ளார். அதில், கல்விக்காகவும், திறன்களை மேம்படுத்துவதற்காகவும் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், அதுவே உங்கள் வாழ்க்கைப் பாதையை மாற்றும் பெரும் திருப்பு முனையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்த நேரத்தில் பல ஆண்டுகளாக தனது குடும்பத்துக்கு சிறந்த வாழ்க்கையை வழங்கி விட வேண்டும் என்பதற்காக, தன்னையே தியாகம் செய்த அவரது தந்தைக்கும் அவர் நன்றி கூறியுள்ளார். என் அப்பாவின் பொறுமையும், தியாகமும் இன்று எங்களை நல்ல நிலைக்கு உயர்த்தியுள்ளன. நாங்கள் சேமிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம் எனவும் ஷாகினா அத்தர்வாலா வெற்றிப் புன்னகையுடன் கூறியுள்ளார்.

-இந்திய ஊடகம்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.