ட்ரோன் (Drone) ஐ இயக்கிய இரு இந்தியர்கள் கைது!

ட்ரோன் (Drone) ஐ இயக்கிய இரு இந்தியர்கள் கைது!

வெலிகம கடற்பகுதியில் காட்சிகளை படம் பிடிக்க அனுமதியின்றி ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) இயக்கிய குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய தம்பதியருக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக துறையில் ஈடுபடுபவர்கள் என கூறப்படும் இருவருக்கு இந்த அபராதம் நேற்று (06) கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகலவினால் விதிக்கப்பட்டது.

தம்பதிகள் தேனிலவிற்காக இலங்கைக்கு வந்துள்ளதோடு, இதன் போது அவர்கள் வெலிகம கடற்கரையில் ஆளில்லா விமானத்தை இயக்கி தங்களைப் பற்றிய படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளைப் படம்பிடித்தனர்.

வெலிகம கடற்கரையில் அனுமதியின்றி ஆளில்லா விமானத்தை இயக்கிய குற்றச்சாட்டில் தம்பதியை வெலிகம பொலிஸார் கைது செய்திருந்தனர்.

சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் அவர்களை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.