இன்று ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
மாலை 5.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை மின்சாரம் தடைபடும் என ஒன்றியத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார்.
சபுகஸ்கந்த அனல்மின் நிலையம் செயற்பாடு இல்லாத காரணத்தினால் மாலை 5.30 மணி முதல் மின்வெட்டு அமுலாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பின்வரும் நான்கு பிரிவுகளின் கீழ் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தம்மிக்க விமலரத்ன மேலும் தெரிவித்தார்.
குழு A: 17:30 மணி முதல் 18:30 மணி வரை
குழு B: 18:30 மணி முதல் 19:30 மணி வரை
குழு சி: 19:30 மணி முதல் 20:30 மணி வரை
குழு D: 20:30 மணி முதல் 21:30 மணி வரை
மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான மின் உற்பத்தி நிலையங்களை இயக்குவதற்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு குறித்து இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றது.
இலங்கையில் உள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் இலங்கை மின்சார சபைக்கு தேவையான எரிபொருளை வழங்க முடியாதுள்ளது.
டொலரின் தட்டுப்பாடு காரணமாக மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்ய முடியாத நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக நீண்ட நேரம் மின்வெட்டு நிலவி வருகிறது. (யாழ் நியூஸ்)