பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இனை சந்தித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை-பாகிஸ்தான் வர்த்தக உடன்படிக்கையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு வழக்கமான கலந்துரையாடல்கள் மற்றும் பரிமாற்றங்கள் அவசியம் என இந்த கலந்துரையாடலின் போது பாகிஸ்தான் பிரதமர் குறிப்பிட்டார்.
இலங்கை-பாகிஸ்தான் வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்கு வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தமக்கும் வர்த்தக சமூகத்தினருக்கும் வழங்கிய அங்கீகாரத்திற்கு நன்றி தெரிவிப்பதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)