ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தம்மை சிறையிலடைப்பதற்கு சாட்சியமோ, தகுந்த காரணியோ இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இன்று (22) இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதலுடன் தம்மை தொடர்புப்படுத்தி போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
அவ்வாறு சிறையிலடைப்பதற்கு எந்தவித சாட்சியமும் இல்லை என்பதுடன், தகுந்த காரணியும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.