அரச ஊழியர்களுக்கான 5000 கொடுப்பனவு ஆசிரியர்களுக்கு இல்லையா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரச ஊழியர்களுக்கான 5000 கொடுப்பனவு ஆசிரியர்களுக்கு இல்லையா?



INTRO :

அரச ஊழியர்களுக்கான 5000 கொடுப்பனவு ஆசிரியர்களுக்கு இல்லை என சமூக வலைத்தளங்கள் அம்பாறை வலயக் கல்வி காரியலயத்தின் கடிதத்தின் புகைப்படத்துடன் செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):



Facebook Link | Archived Link


சமூகவலைத்தளங்களில் "அரச ஊழியர்களுக்கான 5,000 ரூபா கொடுப்பனவு ஆசிரியர்களுக்கு இல்லை!

அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படவுள்ள மாதாந்த மேலதிக கொடுப்பனவான 5,000 ரூபாவை ஆசிரியர்களுக்கு பெற்றுக் கொள்ள முடியாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை வலயக் கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அரச உத்தியோகத்தர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு 2022 ஜனவரி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் நடைபெற்ற கணக்காளர்கள் சந்திப்பிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மேலதிக கொடுப்பனவு, ஆசிரியர் கொடுப்பனவு பட்டியலில் காட்டப்பட்டுள்ள போதிலும், அது கொடுப்பனவுடன் சேர்க்கப்படவில்லை என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த 2 ஆம் திகதி அறிவித்திருந்தார்.

அத்துடன், ஓய்வூதியர்களுக்கும் இந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, 666,480 ஓய்வூதியர்களுக்கு 5,000 ரூபா மாதாந்த மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டது. “ என கடந்த வருடம் இம் மாதம் 20 ஆம் திகதி (20.01.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

முதலில் ஆசிரியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது என்று அரச அதிகாரி யார் சரி அறிக்கை வெளியிட்டுள்ளனரா என்று நாம் ஆய்வு செய்த போது, அவ்வாறான எவ்விதமான அறிக்கையும் வெளியாகியிருக்கவில்லை என்பது உறுதியானது.

இது தொடர்பில் எமது குழுவினர் அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஆர்.ஹசந்தியிடம் வினவியபோது, வலயக் கல்வி அலுவலகத்தின் கணக்காளர் நாயகத்தினால் தனக்குத் தெரியாமல் இக் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதை போன்று, கணக்காளர் கூட்டத்தில் 5000 ரூபா கொடுப்பனவினை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என தெரிவித்தார்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் புதிய சம்பள அதிகரிப்புடன் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் அவர்களின் சம்பளத்துடன் சேர்த்து 5000 ரூபா கொடுப்பனவைச் சேர்ப்பதற்கு போதிய பணத்தைப் பெற்றுக் கொள்ளாத நெருக்கடி நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எனினும் தற்போதைய நிலவரப்படி 5000 ரூபா கொடுப்பனவை இன்று (ஜனவரி 20) அல்லது அடுத்த சில நாட்களில் வழங்க முடியும் என அவர் எமக்கு தெரிவித்தார்.

வலயக் கல்வி அலுவலகத்தின் அனுமதியின்றி கணக்காளர் நாயகத்தினால் இவ்வாறான கடிதம் வழங்கப்பட்டமை தொடர்பில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 19 ஆம் திகதி (19.01.2022) அன்று அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்கள் அம்பாறை வலயக் கல்வி பேஸ்புக் பக்கத்தில் இது குறித்தான பதிவினை வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது.


அசல் பதிவினை காணுவதற்கு :- Facebook I Archive

அம்பாறை பிரதேசத்தில் உள்ள ஆசிரியர்களின் அதிபர்களுக்கு சர்ச்சைக்குரிய கடிதத்தை அனுப்பிய பணியாளர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அது எமக்கு பலனளிக்கவில்லை.

எவ்வாறாயினும், ஹொரணை, பலாங்கொடை மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள பல வலயக் கல்வி அலுவலகங்களில் வினவியபோது, ​​அதிகரிக்கப்பட்ட சம்பளத்துடன் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினும் கிழக்கு மாகாண ஆளுநரும் தெரிவித்த கருத்துக்கள் ‘ஹிரு’ செய்தியில் காணக்கிடைத்தது.


குறித்த செய்தியில் வடமத்திய மாகாணத்திலும் இவ்வாறானதொரு பிரச்சினை காணப்படுவதாகவும், இவ்விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும், எதிர்காலத்தில் இவ்வாறு நடக்காது என நம்புவதாகவும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், அரச ஊழியர்களுக்கான 5000 கொடுப்பனவு ஆசியர்களுக்கு இல்லை என வெளியான செய்தி முற்றிலும் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.மேலும் அம்பாறை கல்வி வலயத்திலுள்ள ஆசிரியர்களும் எதிர்வரும் சில தினங்களில் பெற்றுக் கொள்வார்கள் எனவும் வலயக் கல்விப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நன்றி - factcrescendo.com

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.