நாசகாரர்கள் மற்றும் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு அமைச்சின் செயலாளருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கோரியுள்ளார்.
தற்போதைய பணிப்பாளர் நாயகம் சர்மிளா ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் நேற்று மீண்டும் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்ததை அடுத்து தொழிலாளர்கள் மூன்று நாள் போராட்டத்தை முடித்துக்கொண்டனர்.
இதேவேளை, மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் சர்மிளா ராஜபக்ஷ இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச செய்தித்தாள் தினமின செய்தி வெளியிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)