நாட்டைப் பாதித்துள்ள டொலர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டவுடன் மின்சார விநியோகம் தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளதால் எரிபொருள் பற்றாக்குறையால் அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நொரோச்சோலை மற்றும் நீர் மின் நிலையங்கள் எவ்வித வெட்டுமின்றி அடுத்த வாரம் முதல் இயங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அண்மையில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)