அதிபர் - ஆசிரியர் சேவைகள் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிபர் - ஆசிரியர் சேவைகள் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!


இலங்கை அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை, இலங்கை ஆசிரியர் சேவை ஆகியவற்றை மூன்றும் அகப்படுத்தப்பட்ட சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேராவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அகப்படுத்தப்பட்ட சேவை அறிவித்தலானது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி முதல் அமுலாகுவதாகவும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம் உள்ளிட்ட ஏனைய நிறுவன நடவடிக்கை தொடர்பான அதிகாரங்கள் மற்றும் ஏற்பாடுகள், அந்தந்த சேவைகளுக்காக தற்போது அமுலில் உள்ளவாறு தொடர்ந்தும் நடைமுறையாகும்.

குறிப்பிட்ட சேவைகளுக்கான விசேட வேதன முறைமை தொடர்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வினவி, பொருத்தமான வகையில் திருத்தம் மேற்கொள்ள முடியும் என்றும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.