எதிர்வரும் செவ்வாய்கிழமை (25) முதல் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இன்றும் நாளையும் எரிபொருள் கிடைப்பதன் அடிப்படையில் மின்வெட்டு குறித்து தீர்மானிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் டொக்டர் சுசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு ஏற்படுமா என்பது தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக இலங்கை மின்சார சபையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், இன்றும் நாளையும் மின்வெட்டு இருக்காது எனவும், செவ்வாய்க்கிழமை முதல் எரிபொருள் கிடைக்காத நிலையில் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செவ்வாய்கிழமை முதல் மின் தடை ஏற்பட்டால் பொதுமக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். (யாழ் நியூஸ்)